RSS என்பது என்ன?
பத்திரிக்கைகள் இதழ்கள் ஆகியவற்றின் இணையத்தளங்களில் இருந்தும் பிளாக்ஸ் என்றழைக்கப்படும் கருத்துப் பதிவுத் தளங்களிலும் வெளியிடப்படும் செய்திகளையும் மற்ற விவரங்களையும் சேகரித்து வழங்கும் ஒரு தொழில்நுட்ப வடிவமே "மிகவும் எளிமையான தொகுப்பு" என்ற பொருளுடன் அழைக்கப்படும் RSS (ரியலி சிம்பிள் சிண்டிகேஷன்) என்பதாகும்.
இணைய வெளியீட்டாளர்கள் RSS வடிவத்தின் மூலம் தலைப்புச் செய்திகள் மற்றும் விவரத் திரட்டுக்கள், முக்கிய இணைப்புகள் ஆகியவற்றை திரட்டி தங்களுடைய வாசகர்களுக்கு சுலபமாக அளித்து வருகின்றனர். தி கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், சி.என்.என்., சிநெட் உள்ளிட்ட பல முக்கிய இணையத்தளங்கள் RSS-ன் வாயிலாக அவ்வப்போது தங்களது தளத்தில் பதிக்கப்படும் செய்திகளையும், விவரங்களையும் வாசகர்களுக்கு அளித்து வருகின்றன.
யாஹூ! செய்திகள் RSS வாயிலாக வழங்கும் டஜன் கணக்கான செய்திகளை My Yahoo-வில் நீங்கள் படிக்கலாம்! அல்லது மூன்றாமவர் உருவாக்கிய RSS செய்தி படிக்கும் மென்பொருளையும் பயன்படுத்தி வாசிக்கலாம். RSS பற்றியும், யாஹூ செய்தியில் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள
RSS வாயிலாக யாஹூ செய்தித் தொகுப்பு எப்படிப்பட்ட விவரங்களை வழங்குகிறது?
யாஹூ! செய்தி RSS வடிவத்தின் வாயிலாக ஏராளமான விவரங்களை வழங்குகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் தனி மனிதருக்கும், வணிக அமைப்பற்ற, லாப நோக்கு அல்லாத அமைப்புகளுக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்குகிறது. அவற்றைப் பயன்படுத்துவோர் யாஹூவில் இருந்து பெறப்பட்டது என்பதனை (ஒவ்வொரு வழங்கலிலும்) குறிப்பிட வேண்டும்.
முகப்பு பக்கம் :
செய்திகள் :
ஜோதிடம் :
ஆரோக்கியம் :
சினிமா :
பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் என்னென்ன? தனி நபர்கள், லாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியவற்றின் தனித்த மற்றும் வணிக நோக்கற்ற பயன்பாட்டிற்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அளிக்கப்படும். அதனை பயன்படுத்துவோர் யாஹூ! செய்தி வாயிலாகப் பெறப்பட்டது என்பதனை குறிப்பிட வேண்டும்.
அவ்வாறு யாஹூ செய்தியில் இருந்து பெறப்பட்டதை பயன்படுத்தும்போது "யாஹூ! செய்தி" என்று குறிப்பிட வேண்டும். அதனை வரைவு வடிவத்தில் குறிப்பிடுவதாக இருந்தால் எங்கள் விவர வழங்கல் பக்கத்தில் உள்ள Yahoo! News என்ற லோகோவை பொறித்திடல் வேண்டும்.
Yahoo! News என்கின்ற லோகோவை பயன்படுத்துவது தொடர்பான அனைத்து உரிமைகளும் எங்களுடையது. RSS வாயிலாக நாங்கள் வழங்கும் விவரங்களில் மட்டுமே Yahoo! News எனும் அந்த லோகோவை பயன்படுத்தும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படும்.
நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு செய்தியின் தலைப்பிற்கு கீழ் அது பெறப்பட்ட செய்தி நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படும். செய்திகளை மாற்றாமல் அவ்வாறே வெளியிட வேண்டும். செய்திகளை வழங்கும் எங்களது கூட்டாளிகளின் பணிகள் அவர்களுடைய பெயரால் குறிப்பிடப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
எங்களிடம் இருந்து பெறக்கூடிய விவரங்களை எந்த நேரமும், எந்த காரணத்திற்காகவும் நிறுத்துங்கள் என்று கூறும் உரிமையை யாஹூ! செய்திக்கே உரித்தானது.
RSS-ஐ நான் எவ்வாறு பயன்படுத்துவது?
RSS-ஐ பயன்படுத்துவதற்கும், அதன் வாயிலாகப் பெறுவதற்குமான வழிமுறைகள் :
News Aggregator என்றழைக்கப்படும் புரோகிராமை பயன்படுத்தி RSS வாயிலாக சேகரிப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றைச் செய்யலாம்.
RSS-ல் பெறும் விவரங்களை வெப்லாக்களில் சேர்க்கலாம்.
நியூஸ் அக்ரிகேட்டர்ஸ் (நியூஸ் ரீடர்ஸ் என்றும் அழைக்கப்படுவது) மூலம் உங்களுக்கு RSS வாயிலாகக் கிடைக்கும் விவரங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். இலவசமான மற்றும் வணிக ரீதியிலான ஏராளமான நியூஸ் அக்ரிகேட்டர்கள் உள்ளனர். AmphetaDesk, NetNewsWire மற்றும் Radio Userland போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும் நியூஸ் ரீடர்கள் ஆகும்.
"ஸ்டாண்ட் அலோன்" புரோக்கிராம்களாக மேற்குறிப்பிட்டவைகளைப் போல பல அக்ரிகேட்டர்கள் தனித்தே பயன்படுத்தக்கூடியவை; மற்ற சேவைகள் RSS-ல் இருந்து பெறுபவற்றை உங்களது தளத்திற்கு இறக்கிக்கொள்ள உதவுகின்றன. யாஹூ RSS-ல் இருந்து பெறுபவற்றை உங்களின் My Yahoo! பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவும் உதவுகிறது; இதனை சுலபமாக பயன்படுத்த ஒவ்வொரு இணைப்பிலும் வலது பக்கத்தில் உள்ள "Add to My Yahoo!" என்ற பொத்தானை அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
தற்பொழுது, RSS வாயிலாகப் பெறுபவற்றை யாஹூ! நியூஸ் முதல் பக்கத்திலேயே மை சோர்ஸ் டாப்பிற்கு கீழ் தெரியுமிடத்தில் ஒவ்வொரு செய்தியுடனும் சேர்த்துக் கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரம் அறிய RSS-ல் பெறுபவற்றை மை சோர்ஸில் சேர்ப்பதற்கான தகவல்கள்.
வெப்லாக்ஸ் என்றழைக்கப்படும் "பிளாக்ஸ்"-ல் RSS-ல் இருந்து பெறுபவற்றை பலரும் பயன்படுத்துவது மற்றொரு வழியாகும். பிளாக்ஸ் என்பது சிறிய, ஆனால் குறுகிய இடைவெளிகளில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மற்றும் தள இணைப்புகளைக் கொண்டதாகும். பாரம்பரிய இதழியல், தனித்த இதழ்கள், ஒரு தலைப்பு குறித்த குழு விவாதம் மற்றும் இவைகளையெல்லாம் சேர்த்த பல்வேறு பயன்பாடுகள் என பல நோக்கங்களுக்கான ஒரு வெளியீட்டுக் கருவியாக பிளாக்கிங் உள்ளது.