யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் விரதங்கள் & விழாக்கள்
பாவத்தைப் போக்கிய பரம்பொருளை நினைவுகூறும் கிறிஸ்துமஸ்!
- சரா
பாவமெனும் கறையை தனது இரத்தத்தால் கழுவிட மண்ணில் உதித்த மைந்தனே இயேசு... உலகின் இரட்சகர் இயேசு பிறந்த தினத்தையே நாம் 'கிறிஸ்துமஸ்' ஆக கொண்டாடி மகிழ்கிறோம்; நம்மைச் சுற்றியிருப்போரையும் மகிழ்விக்கிறோம்...

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் இந்தத் தருவாயில் கர்த்தரின் பிறப்பை நினைவுகூறும்போது, உடலை மென்மையாய்த் துளைத்து மனதை வருடிச் செல்லும் சில்லென்ற தென்றலால் சிலிர்க்கும் அனுபவம் வராமலிருக்காது...

கன்னி மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நடைபெறவிருந்த தருணம்... கபிரியேல் என்ற இறைத்தூதர் கன்னி மரியா முன் தோன்றுகிறான்.

'கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர்! இதோ... கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்' எனக் கூறி கர்த்தர் இயேசுவின் வருகையை மனம் மகிழ எடுத்துரைக்கிறான்.

அப்போது, கன்னி மரியாவின் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கும் கபரியேல், ' உன் மீது பரிசுத்த ஆ‌வி வரும். உ‌ன்னதக் கடவு‌‌‌ளி‌ன் வ‌ல்லமையும் உ‌ன் மே‌ல் ‌நிழ‌லிடு‌‌வதால், உமக்குப் பிற‌க்கு‌ம் குழ‌ந்தை தூயது. அ‌க்குழ‌ந்தை இறைமக‌ன் என‌ப்படு‌ம்' என்ற போதுதான் மரியா மன நிம்மதியடைந்தார். ‌

கன்னி மரியாவை மணம் முடிக்க, மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருந்த யோசேப்புக்கு, மரியா கருவுற்றிருக்கும் செய்தி சென்று சேர்ந்தது.

மரியாவை இகழ்ச்சிக்குள்ளாக்க விரும்பாத தூயவரான யோசேப்பு, எவருடைய மனமும் நோகாதவாறு பிரிய எண்ணினார். அப்போது, அவரது கனவில் தோன்றிய இறைத் தூதனோ, 'கன்னி மரியா கருவு‌ற்‌றிரு‌ப்பது பரிசுத்த ஆ‌‌வியா‌ல்தா‌ன். ஏனெ‌னி‌‌ல், அவ‌ர் த‌ம் ம‌க்களை பாவ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்பா‌ர்' எ‌ன்றா‌ர்.

உண்மையை உணர்ந்த யோசேப்பு, தனது கரங்களை கன்னி மரியா பிடிப்பதை மனமுவந்து ஏற்றார்.

'க‌ன்‌னி கருவு‌ற்று பெற்றெடுக்கும் ஆண் மகனுக்கு இ‌ம்மானுவே‌ல் என‌ப் பெ‌ய‌ரிடுவா‌ர்' என ஆ‌ண்டவ‌ர் உரை‌த்தது ‌நிறைவேறவே இவையாவு‌ம் ‌நி‌க‌ழ்‌ந்தன. (இ‌ம்மானுவே‌ல் எ‌ன்றா‌ல் கடவு‌ள் ந‌ம்மு‌ன் இரு‌க்‌கிறா‌‌ர் என்பது பொரு‌ள்).

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தருணம்...
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் ப‌க்‌ரி‌த்!
கந்த சஷ்டி விரதமும் பலனும்!
உலக நாடுகள் கொண்டாடும் தீபாவளி!
தீபாவளியும் நரகாசுரனும்!
நன்மை தரும் நவராத்திரி!
ஸ்ரீ விநாயக சதுர்த்தி!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace