|
| தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் பக்ரித்! | |
பக்ரித்... இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்! உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள், இறை தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் நன்நாள்.
அத்தகைய புனிதரின் வாழ்வையும், தியாகத்தையும் பக்ரித் நாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நினைவுகூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
மக்களின் வாழ்நிலை சீர்குலைந்து, சிதையுண்டு போகும் தருவாயிலெல்லாம், மனித குலத்திலிருந்தே ஒரு நேர்மையாளரை தேர்ந்தெடுத்துத் தனது நேர்வழியையும், அதை அறியாமையால் புறக்கணிப்போர்க்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்யவதையும் நபி (தூதர்) மூலமாக அவ்வப்போது போதித்து வந்தது இறைவனின் செய்கை.
அந்த வகையில், நபி ஆதம் அலைஹிவஸல்லம் முதல் முகம்மது நபி அவர்கள் வரையிலும் தோன்றிய நபிமார்கள் பலரும் ஒவ்வொரு காலத்திலும் தோன்றி தூதுவத்தை அளித்து வந்தனர். இவர்களுள் ஒருவரே நபி இப்ராஹீம்.
தனது காலத்தில் நடந்த கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும், எள்ளளவும் அச்சமின்றி இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்ராஹீம், அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார்.
'இறைவனே எல்லாம்; அவனுக்கு இணையாக எதுவும் இல்லை' எனும் இறைப் பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள். ஆயினும், குழந்தை பேறு கிடையாது.
இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹீம், இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்தார். நபியின் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனையை ஏற்றுக் கோண்டார் அல்லாஹ். அந்த அற்புதமான பொழுது புலர்ந்தது... இப்ராஹீமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு, நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்.
அதன்பின் வாழ்க்கைப் பயணம் இன்பமயகமாக தொடர்ந்தபோது, இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்கு நாள் பெருகியவண்ணம் இருந்தது.
அப்போது, இறைவன் மேற்கொண்ட ஒவ்வொரு சோதனையையும் நிந்தனை செய்யாது வென்ற இப்ராஹீம் நபிக்கு, இறுதியாக மாபெரும் சோதனை வந்தது...
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|