யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் விரதங்கள் & விழாக்கள்
உலக நாடுகள் கொண்டாடும் தீபாவளி!
- தொகுப்பு : சரவணன்
Diwali
AP
தீபாவளி... ஆஹா... இந்தப் பெயரைக் கேட்டவுடன் மனக் கண்களாலே வான வேடிக்கைகளை ரசிக்கிறோம்; நினைவாலேயே இனிப்புகளை ருசிக்கிறோம்!

தீய பாவங்கள் பலவற்றைச் செய்த கொடிய அரக்கனான நரகாசுரன், கிருஷ்ணபகவானால் அழிக்கப்பட்டு, மக்களின் இன்னல்கள் போக்கப்பட்ட தினம், ராம‌பிரா‌ன் தனது இல‌‌ங்கை வனவாசத்தை முடித்துக் கொண்டு ‌(ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு) அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்த தினம்...

இவ்வாறு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடும் தீபாவளி (தீப+ஆவளி - ஆவளி என்றால் வரிசை என்று பொருள்) பண்டிக்கை, வெவ்வேறு காரணங்களைக் கொண்டு கொண்டாடப்பட்டு வந்தாலும், 'தீமைகள் ஒழிந்து; நன்மைகள் மலர வேண்டும்' என்ற சாரத்தைப் பறைசாற்றுவதாலேயே, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு (2007) கனடா பாராளுமன்றத்தில், அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹப்பர் முன்னிலையில், வேதவிற்பன்னர்கள் 9 பேர் சேர்ந்து வேத மந்திரங்களை முழங்கியபடி 'தீபாவளி' பண்டிகை கொண்டாடப்பட்டது.

இது ஒன்றே போதும், இப்பண்டிகையின் மகத்துவத்தை உலகம் அறிந்து வைத்திருப்பதற்கானச் சான்றினைத் தெரிவிக்க!

உலகின் பல்வேறு நாடுகளும் தீபாவளியை எவ்வாறு கொண்டாடி வருகின்றனர் என்பதை பார்ப்போமே...

மொரீஷியஸ்

இந்தத் தீவில் உள்ள மக்கள் தொகையில் 63 சதவிகிதத்தினர் இந்தியர்கள்! இங்கே தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்றுச் சொல்ல வேண்டுமா என்ன? இந்தியாவில் கொண்டாடப்படும் முறைகளிலேயே சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ளது போன்றே, அதிகாலை துயிலெழுந்து, எண்ணெய்த் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, தீபங்களை ஏற்றித் தொழுது, உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளையும் வாழ்த்துக்களையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து இங்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நேபாளம்

இமாலயத்தால் கம்பீரமாக இருக்கும் இந்நாட்டில், வட இந்தியாவைப் போன்றே ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றன. வானவேடிக்கைகளும், தீபங்களும் ஒளிரும் இப்பண்டிகை, செல்வங்களை அள்ளிக்கொடுக்கும் தெய்வமான லஷ்மியை வரவேற்பதற்காகவும் இங்கே கொண்டாடப்படுகிறது.

மலேசியா

வேற்றுமைகளில் இருப்பிடமாகத் திகழும் இந்நாட்டில், சுமார் 8 சதவிகித இந்தியர்கள் உள்ளனர். ஆனால், இந்நாட்டில் குடியேறிய வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியர்களுடன் இணைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இப்பண்டிகையை 'ஹரி தீபாவளி' என்று அழைக்கும் மலேசியர்களில் பலரும், தென் இந்திய முறைப்படியே கொண்டாடுகின்றனர்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் உள்ள பாலி பகுதியில் கொண்டாடுப்படும் 'தீபாவளி' பிரசித்தி பெற்றவை. இப்பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானோரின்
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
தீபாவளியும் நரகாசுரனும்!
நன்மை தரும் நவராத்திரி!
ஸ்ரீ விநாயக சதுர்த்தி!
கொலு வைப்பதன் தத்துவம்!
திருவண்ணாமலை தீபம்
கார்த்திகை சிறப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கற்றது தமிழ்
இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும்...
சத்தம் போடாதே
மருதமலை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace