|
| நன்மை தரும் நவராத்திரி! | |
அன்னை ஆதி பராசக்தியை நாள்தோறும் சிந்தையில் நிறுத்தி, அவள் நினைவிலே வாழ்கிறோம் என்றாலும், இந்தப் பூவுலகைக் காத்து ரட்சித்து வரும் புவனேஸ்வரியை பூமிக்கெல்லாம் தாயாக விளங்கும் அகிலாண்டேஸ்வரியை ஒன்பது நாட்கள் விரதமிருந்து, அன்னைக்கு எழில்மிகு கொலு அமைத்து, ஒளிமயமான வாழ்க்கையைப் பெறவேண்டி வழிபட்டு, வணங்கும் விழாவே நவராத்திரி. இதுவே, சாரதா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் மஹாயை அமாவாசைக்கு மறுநாள், அக்டோபர் 12-ம் தேதி (2007-ல்), சனிக்கிழமை தொடங்கும் இந்த விழா தொடரும் ஒன்பது நாட்களில் மகாதுர்க்கையின் சக்தியைப் போற்றி பத்தாவது நாளான விஜயதசமியன்று (அக்டோபர் 21-ம் தேதி) பராசக்தியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் உயரிய விழாவாக நம் பாரத நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி பூஜையின் தத்துவம்
தமோ குணத்தால் ஏற்படும் அஞ்ஞானத்தைத் தான் மஹிஷம் என்கிற கருப்பு நிற அசுரனாக உருவகப்படுத்துகிறோம். தமஸ் என்கிற தீக்குணத்தால் சோம்பலும், தூக்கமும் உண்டாகும்.
இந்த அஞ்ஞானத்தை தேவியில் திருவருள் கொண்டு, மெய்ஞானம் பெற்று ஒவ்வொருவரும் அகற்ற வேண்டும். தேவியே ஸ்ரீவித்யா, பிரும்மவித்யா, ஆத்மவித்யா ஸ்வரூபிணி. அவளின் அருள் பெற்றால் அஞ்ஞானம் விலகுவது நிச்சயம்.
நவராத்திரி கொலு தத்துவம்
அம்பிகை பராசக்தியை முதல் மூன்று நாட்களில் மகா காளியான இச்சா சக்தியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி துர்கையான கிரியா சக்தியாகவும், கடைசி மூன்று நாட்களில் மகாசரஸ்வதியான ஞானசக்தியாகவும் வணங்கி வழிபடுகிறோம்.
ஆலயங்களில் அம்பிகையின் விக்ரஹம் கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டு நாள்தோறும் ஒவ்வொர் அலங்காரம் என்ற விதத்தில் அலங்கரிக்கப்பட்டு வீடுகளில் அவரவர் இடம் மற்றும் பொருள் வசதிக்கேற்ப ஐந்து முதல் 11 அல்லது 15 படிகள்கூட அமைத்து இறைவன், இறைவி மற்றும் கடவுளர் பலரின் பொம்மைகள் வைத்து 10 நாட்களும் அம்பிகையை ஆராதனை செய்கிறோம்.
மஹாயை அமாவாசையன்று படிகளை அமைத்து, அழகாக அலங்கரித்து, பொம்மைகளை வைத்தபோதும், மறுநாள் பிரதாமயிலிருந்துதான் நவராத்திரி தொடங்கி விஜயதசமியுடன் இனிதே முடிவடைகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|