யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் விரதங்கள் & விழாக்கள்
கார்த்திகை சிறப்பு
- தொகுப்பு : இன்பராஜ்
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகாதீபம் தான். ஆனால், இக்கார்த்திகை மாதத்திற்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாத மகிமை :

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

கார்த்திகைக் கடவுள் :

தெய்வங்களுக்குரியவையாக ஒவ்வொரு நட்சத்திரங்கள் திகழும். ஆனால், முருகப் பெருமானுக்கு மட்டும் இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். விசாக நட்சத்திரமும், கார்த்திகை நட்சத்திரமும்தான் அந்த இரு நட்சத்திரங்கள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றிய சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று. அதிலும் விருச்சிக மாதமாகிய கார்த்திகைத் திங்களில் பௌர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. எனவே, கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை விரதமிருந்து கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கப் பெறுவர்.

சபரிமலை மாலை அணிதல் :

கார்த்திகை மாதம் பிறந்தவுடன் மாலை அணி விழா நடத்தப்படுகிறது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கப்படுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதனால் இம்மாதம் ஸ்ரீ ஐயப்பனுக்கு உரிய மாதமாகவும், ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.

கார்த்திகை பௌர்ணமி :

கார்த்திகை பௌர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. ஆகவே, அன்றைய தினம் மற்ற பௌர்ணமி தினத்தை விட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும்.அன்றைய தினம் சிவசக்தி சமேதராய் பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும், இறைவியும் அருள்பாலிக்கின்றனர். கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம். கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.

சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பௌர்ணமியில், நல்ல நட்சத்திர சக்தி கொண்ட கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வருவதால் இது "பெரிய கார்த்திகை" எனப்படுகிறது. எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற கார்த்திகை மாதத்தில் உள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெறுவோமாக.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கொலு வைப்பதன் தத்துவம்!
திருவண்ணாமலை தீபம்
கார்த்திகை சிறப்பு
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace