யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் விரதங்கள் & விழாக்கள்
மனிதனை நல்வழிப்படுத்தும் ரம்ஜான்
- தொகுப்பு : இன்பராஜ்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். இது பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய வக்கமாகும். அது அல்லாஹ்விடத்தில் அளவற்ற கூலியையும், அவனுடைய அன்பையும் அருளையும் பெற்றுத் தருகிறது. மறுமை நாளில் நோன்பாளிக்காக அவரது நோன்பு அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யும்.

அன்று அதில் அவர் மிக மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வைச் சந்திப்பார். சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் `ரய்யான்" என்னும் வாயிலும் ஒன்று. அதில் நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். இவை போன்ற எத்தனையோ சிறப்புகள் நோன்பிற்கும் ரமலான் மாதத்திற்கும் உள்ளன.

அதே நேரத்தில் நோன்பையும் ரமலான் மாதத்தையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளாதவர் அல்லாஹ்வின் அருளிலிருந்து வெகுதூரமாகிறார். அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவதுடன் மகத்தான நன்மையையும் நற்கூலியையும் இழந்தவராகிறார் என்பதையும் எச்சரிக்கை உணர்வுடன் அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கிவிடாமல் அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து, அவனுடைய நற்கூலிக்கு ஆசைப்பட்டு, ரமலானை முறையாகப் பயன்படத்த வேண்டும்.

நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பு, தொழுகையைப் போன்ற இபாதத் ஆகும். தக்பீர் கட்டி தொழ ஆரம்பித்துவிட்டால் தொழுகைக்கு மாற்றமான, தொழுகையை முறிக்கும் காரியத்தை நாம் எவ்வாறு செய்வதில்லையோ அது போன்றே ஸஹர் செய்து ஃபஜ்ரிலிருந்து நோன்பு திறக்கும் வரை நோன்பிற்கு மாற்றமான, நோன்பை முறிக்கும் காரியத்தில் ஈடுபடக்கூடாது. தொழுகை 10 அல்லது 15 நிமிட வணக்கம் என்றால் நோன்பு சுமார் 12 அல்லது 13 மணி நேர இபாதத் ஆகும். இதனை உணர்ந்து நோன்பின் போது மிகக் கவனமாக நடைமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.


(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
தீபாவளி - நரக சதுர்த்தி
புண்ணியம் தரும் தீபாவளித் திருநாள்
இந்தியாவும் தீபாவளியும்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace