|
| கடவுளின் உருவம் | |
ஒருவன் ஓர் மரத்தில் அழகான பிராணி ஒன்று இருப்பதை கண்டான். அவன் திரும்பி வந்து மற்றொருவனிடம், "தம்பி! அந்த மரத்தில் நான் அழகான ஒரு சிவப்புப் பிராணியை பார்த்தேன்" என்றான்.
அதற்கு மற்றவன், "நானும் பார்த்தேன். ஆனால் அது எப்படி சிவப்பு நிறமாக இருக்க முடியும்? அது பச்சை நிறமாயிற்றே!" என்றான்.
இன்னொருவன், "இல்லை, இல்லை அது எப்படி பச்சையாக இருக்கும்? அது கறுப்பு நிறமாயிற்றே!" என்றான். இப்படி தொடர்ந்து அவர்களுக்குள் சண்டையே மூண்டுவிட்டது.
கடைசியாக அவர்கள் அந்த மரத்தடிக்கு சென்று பார்த்தார்கள். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் இந்த மரத்தடியிலேயே உட்கார்ந்திருப்பவன். எனக்கு அந்த பிராணியை பற்றி நன்றாக தெரியும். நீங்கள் என்னென்ன சொன்னீர்களோ அவையெல்லாம் உண்மை.
சில சமயம் சிவப்பு, சில சமயம் பச்சை, சில சமயம் மஞ்சள், சில சமயம் நீலம் இப்படி எத்தனையோ நிறங்கள் அதற்கு உண்டு. அதுமட்டுமல்ல, சில வேளைகளில் அது எந்த நிறமும் இல்லாததாகவும் காணப்படும்" என்று சொன்னார்.
யார் எப்போதும் கடவுள் நினைப்பில் இருக்கிறானோ அவன்தான் அவர் என்ன உருவத்தை உடையவர் என்பதை அறிய முடியும். அவர் பல உருவங்களில் காட்சியளிக்கிறார். பல நிலைகளில் காட்சியளிப்பார். அவர் குணங்கள் உடையவர், அதே வேளையில் குணங்கள் அற்றவர் என்பதை அவனே அறிவான்.
பச்சோந்தி பல நிறம் கொண்டது, நிறம் அற்றதும் கூட என்பதை மரத்தடியில் இருப்பவனே அறிவான். மற்றவர்கள் வாதமும் சண்டையும் இட்டு துன்பத்தை அடைகின்றனர்.
'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்' நூலிலிருந்து...
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|