|
| ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ? | |
பெரும்பாலானோர் ஜோதிடத்தை நம்புவதில்லை அல்லது நம்பிக்கை இழந்து விட்டனர் என்றுகூட சொல்லலாம். பலரது எதிர்காலம் குறித்து கணித்து சொல்லும் ஜோதிடர் குறித்து இப்படி ஓரு கேள்வி எழுவது இயல்பு.
ஒரு ஜோதிடர் தனக்கு தானே ஜோதிடம் பார்த்துகொண்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்து கொள்ளாதது ஏன்?
வெறுமனே பிறருக்கு மட்டும் ஜோதிடம் சொல்பவர் ஜோதிடரே அல்ல. எந்த மருந்து எப்படி வேலை செய்கிறது எனபதை புரிந்து, அதை நோயாளிக்கு கொடுக்கும் வைத்தியர் போலத்தான் ஜோதிடரும்.
எந்த கிரகம் எப்படி என்ன பலனை தருகிறது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டுதான் ஒரு ஜோதிடர், ஜோதிடம் சொல்கிறார்.
தங்களுக்கு தாங்களே பரிகாரம் செய்துகொண்டு நன்றாக இருக்கும் அனுபவம் இருப்பதால்தான் 'நீங்களும் இப்படி செய்யுங்கள்' என்று பிறருக்கு அறிவுரை வழங்க முடிகிறது.
உண்மையில் ஜோதிடர்கள் தங்களுக்கு தாங்களே ஜோதிடம் பார்த்துக் கொள்வது உண்டு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|