|
| இகபர சுகம் பெற குரு வழிபாடு | |
வாழ்வில் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக நாம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது குருவுக்கு தான். நமது வாழ்வின் வழிகாட்டியாக திகழும் இந்த குருவை பற்றி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இப்படி கூறுகிறார்:
சாத்திரங்களில் பலவகை குருக்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. போதகுரு, வேதகுரு, விகிதகுரு, காம்யகுரு, வாசககுரு, காரண குரு, மற்றும் பீடிகைகுரு என பல வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் போதகுரு, சாத்திரங்களின் விதிகளையும், அவைகளை பின்பற்றும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறார். வேத குருவானவர் தத்துவங்களை உபதேசித்து கடவுளின்பால் மனதை நாட்டம் கொள்ள செய்பவர்.
விகிதகுரு என்பவர் சீடர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கி, சித்த சுத்திக்கு வழிகாட்டுபவர். வசிஷ்ட குருவானவர் கர்மங்கள் செய்யும் வழிமுறைகளை விளக்கி இகபர சுகம் பெற வழிகாட்டுபவர்.
காம்யகுரு என்பவர் நற்பணிகளை செய்ய வழிகாட்டுபவர். சூசககுரு என்பவர் இந்திரியங்களை அடக்கும் வழியை விளக்கி தெய்வத்துவத்தை உணர செய்பவர். காரணகுரு என்பவர் ஜீவ பிரும்ம ஐக்கியத்துக்கு வழிகாட்டுகிறார்.
இந்த குருக்களில் காரணகுருவே மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். இவரே ஜீவ தத்துவம் பிரம்ம தத்துவம் பற்றி விளக்குகிறார்.
மனிதர்களின் குறிக்கோளான பிரம்மத்துவம் அடைய காரணமாயிருப்பவர் இந்த வகை குருவே. மனிதனுக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. தெய்வம் ஓன்றே உண்மை. இதை எடுத்துரைப்பவர் தான் நமது குரு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|