|
| வள்ளுவரின் 'கடவுள் வாழ்த்து' |
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
இறைவன், கடவுள் என்பதற்கு உரிய பொருளைப் புரிந்து கொண்டு, அதன்மூலமாக புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவாகக் கருதி எதிர் கொள்வார்கள்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் (6)
ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றுபவர்களது புகழ் மிகுந்த வாழ்வு எப்போதும் நிலையானதாக அமையும்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (7)
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீருவதற்கு வழியேதுமில்லை.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது (8)
அந்தணர் என்பதற்குப் பொருள் 'சான்றோர்' என்பதே, ஆகையால், அறத்தின் கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் வழியை பின்பற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9)
ஐம்பொறிகளான மெய், கண், காது, மூக்கு, வாய் என அனைத்தும் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலை உண்டாகுமோ, அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் (10)
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள், தலையானவனாக இருப்பவனான இறைவனின் அடி தொடர்ந்து செல்லாமல்போனால், நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|