யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
வள்ளுவரின் 'கடவுள் வாழ்த்து'
- தொகுப்பு : எஸ்.சரவணன்
தெய்வப்புலவர் என்றழைக்கப்படும் திருவள்ளுவர் இயற்றி உலகுக்கு படைத்த திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை என்பதை எவராலும் மறுக்க இயலாது.

அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளில், ஆன்மீகத்துக்கு உரிய இடத்தை வள்ளுவர் கொடுத்திருப்பது அதன் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

எந்தவொரு காரியத்தைத் தொடங்கும்போது கடவுளை வாழ்த்திவிட்டே துவங்குதல் என்பது தமிழர்களின் மரபு. வள்ளுவரும் அவ்வாறே கடவுள் வாழ்த்து உடன் திருக்குறளைத் துவக்குகிறார். அந்த முதல் அதிகாரத்தின் 10 குறள்களும், அதன் பொருள்களும் இதோ உங்கள் அக தரிசனத்துக்கு...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (1)

எழுத்துக்களுக்கு எல்லாம் 'அகரம்' முதன்மையாகத் திகழ்வது போல, உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் 'ஆதிபகவன்' முதன்மையாகத் திகழ்கிறான்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (2)

ஒருவன் தன்னைக் காட்டிலும் அறிவில் மூத்த சான்றோர்களை வணங்கும் பண்பு இல்லாதுபோனால், அவன் கற்ற கல்வியில் எவ்வித பயனும் இல்லை.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (3)

மலர் போன்று மனத்தில் நிறைந்தவனைப் எப்போதும் தவறாமல் பின்பற்றுவோரின் புகழ் நிறைந்த வாழ்வுவானது, உலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (4)

ந்நேரத்தில் விறுப்பு வெறுப்புகள் அற்று, தன்னலத்திற்கு இடம் கொடுக்காமல் வாழ்பவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு ஒருபோதும் துன்பம் ஏற்படுவதில்லை.



(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
நவரத்தின கல் மோதிரம் அணிவதால் நன்மையா?
ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ?
இகபர சுகம் பெற குரு வழிபாடு
மதங்களும் மக்களும்...
திருநீற்றின் நன்மைகள்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace