|
| சக்தியின் ஆற்றல் | |
பிரபஞ்சம் முழுவதும் மாயாசக்தியின் சொரூபம். மாயை என்னும் பதத்தை சூனியம் என்றும் மித்தை அல்லது பொய் என்றும் தப்பாகப் பொருள்படுத்துவார் சிலர் உண்டு. மாயாவாதம் என்னும் ஒரு சம்பிரதாயத்தைப் பற்றி மாறுபடும் அபிப்பிராயங்கள் இருந்து வருகின்றன.
மித்தையாகிய இவ்வுலகம் முக்காலத்திலும் இல்லவே இல்லையென்று வாதிப்பாரும் இதற்கு மாறாக இக்கூற்றைக் கண்டிப்பாரும் ஆகிய இருபிரிவினர் உளர். ஆனால் மாயையை வெறும் வாதமல்லவென்று அறிவது அவசியம். உலகத்தைப் பற்றி உண்மை விளக்குவது மாயை.
யாண்டு அழியாது நித்தியமாய் இருப்பது பரம்பொருள். அக்கினியின் உஷ்ணம் போன்று என்றும் பிரியாது பிபரம்பொருளைச் சார்ந்திருக்கும் ஆற்றலுக்குச் சக்தி அல்லது மாயை என்று பெயர். இந்த சக்தியானது ஒவ்வொரு கணம் தோறும் சலித்துக் கொண்டிருக்கிறது.
ஜகத் என்பதன் பொருள் மாறுபடும் தன்மையுடையது என்பதாகும். சதா அது உருமாறிக் கொண்டிருப்பதால் குறிப்பிட்ட ஒரு வடிவம் அல்லது ரூபம் நிலைத்ததன்று. ரூபம் திரிவுபடும் போது அதன் பெயரும் மாறுகிறது.
ஜடப்பொருளில் இயங்குகின்ற சக்தி ஒன்றுக்கொன்று உடன்பாடாயிருக்கும் போது அதற்குக் கவர்ச்சி என்று பெயர். எதிர்மறையிருக்கும்போது அதற்கு விலக்கு என்று பெயர். ஜீவிய தத்துவத்தில் இதே சக்தி விருப்பு,வெறுப்பு என்ற பெயர்கள் படைக்கின்றது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|