யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
அபிஷேகம் செய்வதன் நன்மைகள்
- தொகுப்பு : எஸ்.சரவணன்
இறைவனுக்கு அபிஷேகம் செய்தல் என்பது வழிபாட்டில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இதனால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

இறைவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

இதோ உங்களுக்காக அபிஷேகம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் :

* தூய்மையான நீரால் அபிஷேகம் செய்தால், நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும்.

* நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வதன் மூலம், நம் வாழ்க்கை சுவை மிகுந்ததாகவும், சுகம் நிறைந்ததாகவும் அமையும்.

* பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் சிறப்புடன் காணப்படும். அத்துட்டன், தேவையான செல்வங்களும் சேரும்.

* பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தியும், இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்ப நலனும் ஏற்படும்.

* பசுவின் பால், தயிர், நெய், கோமயம், சாணம் ஆகியவை அடங்கிய பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நிவர்த்தியாகும்.

* நெல்லி முள்ளைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால், நோய்கள் நீங்கப் பெறுவோம்; தேனில் அபிஷேகம் செய்தால் வாழக்கை இன்பமயமாகும்.

* வாழைப்பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும்; அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் ராஜ போக வாழ்வைப் பெறுவோம்.

* சந்தனத்தினால் அபிஷேகம் செய்வோமாயின் எட்டுவித செல்வங்களைப் பெறுவோம்.

இறைவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை தெரிந்து கொள்ளும் அதேவேளையில், அபிஷேகம் செய்வதற்கான உகந்த கிழமைகளையும் அறிந்து கொண்டு செயல்படுவோமாயின் மேலும் நன்மை விளையும்.

ஞாயிற்றுக்கிழமை விநாயகர் மற்றும் நவ கிரகங்களுக்கும், திங்கட் கிழமை சிவ பெருமானுக்கும் அபிஷேகம் செய்தல் வேண்டும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் முறையே முருகன், விஷ்ணு, தட்சிணா மூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும் சனிக்கிழமை கண்ணபிரான் மற்றும் அவரது அவதாரங்களுக்கும் அபிஷேகம் செய்தல் நன்மை பயக்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நவரத்தின கல் மோதிரம் அணிவதால் நன்மையா?
ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ?
இகபர சுகம் பெற குரு வழிபாடு
மதங்களும் மக்களும்...
திருநீற்றின் நன்மைகள்
வள்ளுவரின் 'கடவுள் வாழ்த்து'
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace