|
| வீரர்களை விடுவிக்க ஐ.சி.எல். ஒப்புதல் |
| டர்பன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 13:01 IST ) | |
பி.சி.சி.ஐ-யிற்கு போட்டி கிரிக்கெட் அமைப்பாக துவங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பு 50 வீரர்களை தங்களது ஒப்பந்தங்களிலிருந்து விடுவிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. சுமார் 50 வீரர்களை முதலில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதில் நியூஸீலாந்தின் ஷேன் பாண்ட், பாகிஸ்தானின் இம்ரான் நசீர், நவேத்-உல்-ஹஸன், வங்கதேசத்தின் ஹபிபுல் பஷார், தீப் தாஸ் குப்தா, அபிஷேக் ஜுஞ்ஜுன்வாலா மற்றும் ஹேமங் பதானி ஆகியோர் இந்த விடுவிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இது ஐ.சி.எல். கிரிக்கெட்டிற்கு ஒரு பின்னடைவல்லவா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஐ.சி.எல். வர்த்தகப் பிரிவு தலைவர் ஹிமான்ஷு மோடி, "இது பின்னடைவு அல்ல, மாறாக லீகை இன்னும் சீராக மாற்ற முடிவதற்கான திட்டம் இது, வரும் அக்டோபரில் இருபதுக்கு 20 கிரிக்கெட் நடைபெறும், மேலும் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று கூறினார்.
இது குறித்து ஐ.சி.எல். நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.சி.எல். கிரிக்கெட் அமைப்பு இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக துவங்கப்பட்டது, சில வீரர்கள் அதிகார பூர்வ கிரிக்கெட் அமைப்பிற்கு செல்ல விரும்புகின்றனர், அவர்களுடைய கனவுகளை எங்களது ஒப்பந்த ரீதியான கட்டுப்பாடுகளை விதித்து தகர்க்க ஐ.சி.எல். ஒரு போதும் விரும்பவில்லை.
பல உள் நாட்டு வீரர்கள் ஐ.சி.எல். கிரிக்கெட்டில் சர்வதேச வீரரகளுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றனர், தொடர்ந்து ஐ.சி.எல். இளம் திறமைகளை வளர்த்தெடுக்கும் பணியை செய்யும்.
அதிகார பூர்வ கிரிக்கெட்டிற்கு செல்லும் அந்த வீரர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள், இவர்கள் பலிகடாவாக்கப்பட மாட்டார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|