யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்
டர்பன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 12:57 IST )
டர்பனில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக் கனவுடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 116 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் 92 ரன்களை மட்டுமே இழந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

சென்னை அணியில் இந்த ஆட்டத்திலும் ஹைடன் இடம் பெறவில்லை. மேலும் அல்பி மோர்கல், தியாகி, ஜகாதி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அஷ்வின், துஷாரா, கோனி சேர்க்கப்பட்டனர்.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு பார்த்தீவ் பட்டேலும், ஜார்ஜ் பெய்லியும் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் இதனை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். ஸ்கோர் 40 ரன்களை எட்டிய போது, ஜார்ஜ் பெய்லி (15 ரன்) யுவராஜ்சிங் மூலம் ரன்-அவுட் செய்யப்பட்டார். சிறிது நேரத்தில் பார்த்தீவ் பட்டேலும் (32 ரன், 23 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார்.


இதன் பிறகு ஸ்ரீசாந்த், இர்பான் பத்தான் பந்து வீச்சில் சென்னை அணி சீர்குலைந்தது. நட்சத்திர ஆட்டக்காரர்கள் பத்ரிநாத்(4 ரன்), கேப்டன் தோனி (2 ரன்), ரெய்னா (20 ரன்) ஆகியோரும் பெவிலியன் திரும்பியதால் சென்னை அணியின் ரன்-ரேட் 6 ரன்களுக்கும் குறைந்து போனது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுக்க முடிந்தது.

பஞ்சாப் தரப்பில் இர்பான் பதான், ஸ்ரீசாந்த் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணிக்கு சென்னை பதிலடி கொடுத்தது. சென்னை அணியின் சுழல் பந்து வீச்சு கூட்டணியான முரளிதரன், அஷ்வின், ரெய்னா ஆகியோர் அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். சோகைலின் (3 ரன்) விக்கெட்டை வீழ்த்தி அவர்களின் வீழ்ச்சிக்கு துஷாரா அடித்தளம் போட்டார். 2-வது விக்கெட்டாக கேடிச் (8 ரன்) முரளிதரன் பந்தில் போல்டு ஆனார்.

இதன் பிறகு சுழற்பந்து வீச்சில் ரன் எடுக்க பஞ்சாப் வீரர்கள் திணறினார்கள். அவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து அவர்களின் விக்கெட்டுகளை சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் முரளிதரன், ரெய்னா, அஷ்வின் ஆகியோரும் கைப்பற்றி ஆட்டத்தை சென்னை அணிக்கு சாதகமாக மாற்றினார்கள்.

இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 8 விக்கெட்டுக்கு 92 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக போமர்ஸ்பாஷ் 26 ரன்களும், இர்பான் பத்தான் 14 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 17 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.14 புள்ளியுடன் உள்ள பஞ்சாப் அணிக்கு இது 7-வது தோல்வியாகும். இதன் மூலம் அவர்களின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது எனலாம்.

இன்று (வியாழக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் டெக்கான்-பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணியும் தலா 14 புள்ளியுடன் உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதன் பிறகு இந்த ஆட்டத்தில் தோல்வியுறும் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையே ரன்-ரேட்டை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இன்னொரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும். அப்படி பார்த்தால் பஞ்சாப் அணியின் ரன்-ரேட் மிகவும் குறைவாக இருப்பதால் அரைஇறுதி வாய்ப்பு பெறுவது கடினம் தான்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெஸ்ட் தரவரிசையில் கம்பீர் 3-வது இடம்
நிச்சயமற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ்
காலிஸ் அபாரம்; பெங்களூர் வெற்றி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி
மீண்டும் சர்ச்சையில் ஷோயப் அக்தர்
நடத்தை வீதிகளை மீறினார் மெக்கல்லம் : நடுவர்கள் புகார்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...