|
| நிச்சயமற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் |
| டர்பன் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 16:01 IST ) | |
டர்பனில் இன்று நடைபெறும் முக்கியமான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 13 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் இதில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகள் பெற்று மற்ற அணிகளின் முடிவிற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
நிகர ரன் விகிதத்திலும் மைனஸ் நிலையில் உள்ள ராஜஸ்தான் இந்த போட்டியில் கொல்கட்டா அணியை மிகப்பெரிய அளவிலான வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் இந்த தொடரில் சோபிக்கவில்லை. துவக்கவீரர்கள் சரியாக விளையாடவில்லை. கிரேம் ஸ்மித் தொடர்ந்து சோபிக்காமல் இருக்கிறார். யூசுஃப் பத்தானை நம்ப முடியாது. ரவிந்தர ஜடேஜாவும் முக்கிய இன்னிங்ஸ்களில் சிறப்பாக விளையாடினாலும் அவரும் சோபிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் கொல்கட்டா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மனோ நிலையில் களமிறங்கும், மாறாக ராஜஸ்தான் அணியோ அரையிறுதி வாய்ப்பை பெறும் நிலை உள்ளதால் அழுத்தம் அதிகமான மனோ நிலையில் களமிறங்கும்.
பந்து வீச்சில் முனாஃப் படேலும் ஷேன் வாருனும் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரே நிலையில் இருந்தாலும், கடந்த டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தது இந்த ஐ.பி.எல். தொடரில் இரண்டாவது மிகப்பெரிய ரன் அளிப்பு ஓவராகும்.
மாலை 4.00 மணிக்கு துவங்கும் இந்த போட்டியும், 8.00 மணிக்கு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் லெவன் போட்டியும் விறுவிறுப்பின் உச்சகட்டத்திற்கு செல்லும் என்பதில் ஐயமில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|