யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
காலிஸ் அபாரம்; பெங்களூர் வெற்றி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பு
டர்பன் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 15:51 IST )
ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற்ற முக்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 134 ரன்களுக்கு மட்டுப்படுத்திபெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பின்பு 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜாக் காலிஸ் தனது அபார பன்முகத் திறமையை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றி மூலம் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷேவாக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஷேவாக்கும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பிரவீன்குமார் வீசிய முதல் ஓவரே டெல்லி அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மீண்டும் ஏமாற்றம் அளித்த ஷேவாக் ரன் ஏதுமின்றி கேட்ச் ஆனார். அதனை தொடர்ந்து உள்ளே வந்த மிதுன் மன்ஹாசும் (0) அவரது பந்து வீச்சிலேயே ஆட்டம் இழந்தார்.

ஆனால் இந்த வீழ்ச்சியை பற்றி கவலைப்படாமல் கம்பீர் அதிரடியாக ஆடினார். பிரவீன்குமாரின் அதற்கு அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி ஓட விட்டார். என்றாலும் அவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர் 27 ரன்களில் (19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். பிரவீண் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பிறகு அனில் கும்ளேயின் ஸ்பின் பந்து டெல்லி அணியை பெரிதும் கட்டுப்படுத்தியது. அவர் 4 ஓவர்கள் வீசி மெக்டொனால்டையும், நாகரையும் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களையே எடுத்தது.

இலக்கை துரத்த பெங்கலூர் அணி களமிறங்கியபோது உத்தப்பா மீண்டும் சோபிக்காமல் போனார். அவர் 1 ரன் எடுத்து நெஹ்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு திராவிடும், காலிஸும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடுவது போல் நிதானமாக விளையாடி 12.3 ஓவர்களில் ஸ்கோரை 72 ரன்னாக உயர்த்தினர். திராவிட் 38 ரன்கள் எடுத்து நாகர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு லேசாக டெல்லிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. ஆனால் ராஸ் டெய்லர் களமிறங்கி 12 பந்துகளில் 3 சிக்சர்களையும் 1 பவுண்டரியையும் விளாசி டெல்லி அணியின் வாய்ப்பை பறித்தார்.

ஆனால் 101/2 என்று இருந்தபோது டெய்லர் ஆட்டமிழந்தார். ஆனால் 5 ஓவர்களில் 34 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது.

அதனை பௌச்சரும், காலிஸும் எடுத்து வெற்றி பெற்றனர். காலிஸ் 56 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி
மீண்டும் சர்ச்சையில் ஷோயப் அக்தர்
நடத்தை வீதிகளை மீறினார் மெக்கல்லம் : நடுவர்கள் புகார்
ஐபிஎல் : சென்னை - கொல்கத்தா இன்று மோதல்
ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி; டெல்லியிடம் தோல்வி
சென்னை வெற்றி; அரையிறுதி வாய்ப்பை இழந்தது மும்பை
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...