|
| மீண்டும் சர்ச்சையில் ஷோயப் அக்தர் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 12:48 IST ) | |
சர்ச்சைகளுக்கு பெயர் போன பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது.
புர்பானில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியின் உடல் தகுதி முகாமில் பங்கேற்க முடியாத அக்தர், தனக்கு காயம் ஏற்பட்டதால் அதில் பங்கேற்க முடியவில்லை என்று தனியார் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கோண்ட அறிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும் இவர் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவிடம் முதலில் ஆலோசிக்கவேண்டும் என்பது விதிமுறை.ஆனால் அவர் தனியார் மருத்துவரை வாரியத்தின் அனுமதியின்றி ஆலோசனை செய்துள்ளார்.
ஆனால் மே மாதம் 21 ம் தேதி முதல் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களுக்கு தான் தயார் என்று அவரே அறிவித்துள்ளார்.
அவரது இந்த செயல்பாட்டினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஜாஜ் பட் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
எனவே அவர் மீது மேலும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நம்பத் தகுந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தகவல்கள் கூறுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|