|
| நடத்தை வீதிகளை மீறினார் மெக்கல்லம் : நடுவர்கள் புகார் |
| டர்பன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 17:31 IST ) | |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் நடுவர் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.இதனால் அவர் மீது நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ரோஹித் ஷர்மா விளாசிய 21 ரன்களால் தோல்வியை தழுவிய அன்று நடுவர் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கள நடுவர்களான ரவி மற்றும் ரூடி கர்ட்சன் ஆகியோர் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.
மோர்டசா வீசிய மோசமான கடைசி ஓவரின் முதல் பந்தை ஸ்கொயர் லெக் நடுவர் ரவி நோ-பால் என்று அறிவித்தார். இதனை ஏற்காத மெக்கல்லம் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|