|
| ஐபிஎல் : சென்னை - கொல்கத்தா இன்று மோதல் |
| டர்பன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 17:24 IST ) | |
செஞ்சூரியனில் இன்று நடைபெறவுள்ள ஒரே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தனது அரையிறுதி நுழைவை உறுதி செய்யும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மெக்கல்லம் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று வெற்றி பெறாவிட்டால், அடுத்ததாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தை எதிர் நோக்கிக் காத்திருக்க வேண்டி வரும்.
இரண்டு போட்டிகளிலும் தோற்றால் பிற அணிகளின் புள்ளிகள் மற்றும் நிகர ரன் விகித்துடன் சென்னை ரன் விகிதம் போட்டியில் இறங்கி முடிவு தீர்மானிக்கும் நிலை ஏற்படும்.இதனால் இன்று வென்றே தீர்வது என்று தோனி முடிவெடுப்பார் என்று நம்பலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாறாக பிராட் ஹாட்ஜ், டேவிட் ஹஸ்ஸியின் ஆட்டத்தினால் தற்போது நன்றாக விளையாடினாலும் கடைசி ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் வெற்றி பெற வேண்டிய ஆட்டங்களிலும் மோசமான பந்து வீச்சினால் தோல்விகளை சந்தித்து வருகிறது.
மஷ்ரஃபே மோர்ட்டசாவிற்கு ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து, அதிலும் அவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 21 ரனகளை விட்டுக் கொடுத்து இந்த ஐ.பி.எல். தொடரிலேயே 4 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்த வீச்சாளர் என்ற வினோத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சென்னை அணியில் ஹெய்டன் விக்கெட்டை முதலில் வீழ்த்திவிட்டால் ரெய்னா, பத்ரி நாத் உள்ளிட்ட வீரர்களின் பலவீனத்தை பயன்படுத்தி பெங்களூர் செய்தது போல் 130 ரன்களுக்குள் சென்னையை சுருட்டலாம்.ஆனால் தோனி நடுவில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார்.
சென்னை பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது.ஃபீல்டிங் சற்றே மந்தம்தான். பாலாஜி, முரளிதரன், ஜகதி, மோர்கெல் சிறப்பாக வீசி வருகின்றனர்.
கடந்த சில போட்டிகளைப் போல் இந்த போட்டியிலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.ஆட்டம் இன்று இரவு 8.00 மணியளவில் நடைபெறும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|