|
| ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி; டெல்லியிடம் தோல்வி |
| டர்பன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 12:49 IST ) | |
ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் ஏ.பி.டீவிலியர்ஸ் அபாரமான 79 ரன்களால் 150 ரன்கள் இலக்கை எட்டிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி அதன் பிறகு சால்வி, மிஷ்ரா, மஹரூஃப் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சினால் ராஜஸ்தான் அணியை 136 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 9 -வது வெற்றியை ஈட்டியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் (8 ரன்), ஷேவாக் (2 ரன்) மோசமான தொடக்கம் அளித்தாலும் பின்னால் வந்த வீரர்கள் பொறுப்புடன் ஆடிய அணியை காப்பாற்றினார்கள். தில்ஷன் 33 ரன்னில் (41 பந்து) ஆட்டம் இழந்தார்.
டிவில்லியர்ஸ் 79 ரன்னுடனும் (55 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 23 ரன்னுடனும் (11 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) இறுதி வரை களத்தில் இருந்தனர்.
கடைசி 3 ஓவரில் மட்டும் டெல்லி அணி 46 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான் தரப்பில் முனாப்பட்டேல் 2 விக்கெட்டுகளும், போத்தா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 24 ரன்கள் எடுப்பதற்குள் ஸ்மித் (0), குவீனி (6 ரன்), நமன் ஓஜா (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா (24 ரன்), ஜோகன் போத்தா (37 ரன்) ஜோடி கடுமையாக முயற்சித்தாலும் அவர்களது போராட்டத்திற்கு பலன் கிட்டவில்லை.
அதிரடி மன்னன் யூசுப் பத்தானும் ஏமாற்றியதால் ராஜஸ்தானின் நம்பிக்கை தகர்ந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.
ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்ட டெல்லி அணிக்கு இது 9-வது வெற்றியாகும். இதன் மூலம் 18 புள்ளியுடன் தொடர்ந்து அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
ராஜஸ்தானுக்கு இது 6-வது தோல்வியாகும். இதன் மூலம் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. ராஜஸ்தான் தனது கடைசி லீக்கில் வருகிற 20-ந்தேதி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|