யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை வெற்றி; அரையிறுதி வாய்ப்பை இழந்தது மும்பை
டர்பன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009   ( 15:06 IST )
தென்ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 47வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம், மும்பை இண்டியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போர்ட் எலிசபெத் நகரில் நடந்த இப்போட்டியில் மும்பை அணி பூவா-தலையா வென்று முதலில் பேட் செய்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக முரளி விஜய்க்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

ஜெயசூர்யாவும், பிராவோவும் மும்பை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பிராவோ 5 ரன் எடுத்த நிலையில் மோர்கெல் பந்தில் கிளீன் போல்டு ஆனார். இதையடுத்து தென்ஆப்பிரிக்காவின் டுமினி களமிறங்கினார்.

இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா அதிரடியாக ஆடத் துவங்கினார். ஆனால் அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. தியாகி பந்து வீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசிய ஜெயசூர்யா அதே ஓவரின் கடைசி பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தா. அவர் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். அடுத்து உள்ளே வந்த சச்சின் தெண்டுல்கர் 11 ரன்களில் ஆட்டமிழந்ததால் மும்பை அணி தடுமாறியது.

இதன் பின்னர் டுமினியுடன், அபிஷேக் நாயர் இணைந்தார். இந்த கூட்டணி மும்பை அணிக்கு கணிசமான ரன்களைப் பெற்று தந்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டுமினி ஐ.பி.எல் தொடரில் தனது 5வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அவர் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. நாயர் 33 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவரில் மும்பை அணி 51 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற 148 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே பார்தீவ் படேல் விக்கெட்டை இழந்தாலும், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, துவக்க வீரர் ஹெய்டனுடன் நிதானமாக விளையாடினார். இதில் ரெய்னா 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பத்ரிநாத் ஆட வந்தார். மறுமுனையில் ஹைடன் வழக்கத்துக்கு மாறாக தடுமாறினார். மும்பை அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இன்னிங்சின் 12வது ஓவர் வரை அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்காதது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மறுமுனையில் பத்ரிநாத் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் அணித்தலைவர் தோனி களம் புகுந்தார். ஹைடன்-டோனி ஜோடி நிதானமாக ரன்களை சேகரித்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு உருவான நெருக்கடி குறைந்த கொண்டே வந்தது.

கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 18வது ஓவரை வீசிய ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் ஹைடன் ஒரு சிக்ஸர், டோனி ஒரு பவுண்டரி விளாச அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்ததால் சென்னை அணியின் வெற்றி பிரகாசமானது.

இதன் பின்னர் 19வது ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இறுதி ஓவரை வீசிய பிராவோ பந்து வீச்சில் முதல் பந்திலேயே டோனி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஹைடன் 60 ரன், டோனி 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருது ஹைடனுக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தோல்வியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது. இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே மும்பை அணிக்கு மீதமுள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் மும்பை அணி அரையிறுதியில் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்ரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல். இருபது-20 தொடரில் கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு அடுத்து 2வது அணியாக மும்பை அணி அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறி உள்ளது
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கடைசி பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெக்கான்
ஐ.பி.எல்.லில் விளையாட முடியாமல் செய்தனர் : டெய்ட் குற்றச்சாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் கடினமானது : சேவாக்
மும்பையை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி
பெங்களூர்-கொல்கட்டா ஆட்டத்தில் ஊழல்?
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...