|
| கடைசி பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெக்கான் |
| ஜோகன்னஸ்பர்க் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009 ( 15:02 IST ) | |
தென்ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 48வது லீக் போட்டியில், கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசிப் பந்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீழ்த்தியது.
இந்திய நேரப்படி நேற்றிரவு 8 மணியளவில் துவங்கிய இப்போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.
அணித்தலைவர் மெக்கல்லம் 20 ரன்னும், கங்கூலி 33 ரன்னும், பிராட் ஹாட்ஜ் 48 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் ரன் வேகமாக உயர முக்கிய பங்கு வகித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹஸ்ஸி 17 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி காரணமாக கடைசி 5 ஓவரில் மட்டும் கொல்கத்தா அணி 71 ரன்கள் குவித்தது.
வெற்றி பெற 161 ரன்கள் தேவை என்ற இலக்குடன் டெக்கான் அணியின் தலைவர் கில்கிறிஸ்ட், தென்ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் களமிறங்கினர். இதில் கில்கிறிஸ்ட் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிப்ஸ் 28 ரன்களில் வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய சுமன் 31 ரன்கள், சைமண்ட்ஸ் 18 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் டெக்கான் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலை காணப்பட்டது. வங்காளதேசத்தின் மோர்தாஸா கடைசி ஓவரை வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்து ‘நோ-பால்’ என அறிவிக்கப்பட்டது. அதனை ரோஹித் ஷர்மா பவுண்டரிக்கு விரட்டினார். இதையடுத்து ‘ஃப்ரீ-ஹிட்’ பந்தில் ரோஹித் ஷர்மா ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தில் வேணுகோபால் ராவ் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் ரோஹித் சிக்ஸர் விளாசினார். இதன் காரணமாக கடைசி 3 பந்தில் எட்டு ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரின் 4வது பந்தில் ஷர்மா 2 ரன் சேகரித்தார். இதையடுத்து 5வது பந்தில் ஷர்மா பவுண்டரி விளாசி அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவை என்றாலும், ஷர்மா சிக்ஸர் அணியின் வெற்றியை ஆணித்தரமாக பதிவு செய்து 32 ரன்களுடன் (13 பந்துகளில்) ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் ஆட்டநாயகன் விருதும் ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|