யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐ.பி.எல்.லில் விளையாட முடியாமல் செய்தனர் : டெய்ட் குற்றச்சாட்டு
மெல்போர்ன் (ஏஜெனசி), வெள்ளிக்கிழமை, 15 மே 2009   ( 19:02 IST )
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட்டை உடல் தகுதி காரணம் காட்டி ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் பங்கேற்கமுடியாமல் செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பின்பு அவருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்தத்திலும் வாய்ப்பு அளிக்காமல் கைவிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஷான் டெய்ட், தன்னுடைய கிரிக்கெட்டை முடக்கிய அணித் தேர்வுக் குழுத் தலைவர் ஆன்ட்ரூ ஹில்டிச்சை 'இனிக்க இனிக்க பேசி மழுப்புபவர்' என்று குற்றம்சாட்டினார்.

ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட தான் முழு உடல் தகுதி பெற்றிருப்பதாக கூறிய ஷான் டெய்ட், தன்னை ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் செய்து, இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்படுவதான ஒரு மாயையையும் உருவாக்கி, பின்பு அந்த ஒப்பந்தத்திலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது கடும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் தனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறும் ஷான் டெய்ட், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடப்போவதாக தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐ.பி.எல். கிரிக்கெட் கடினமானது : சேவாக்
மும்பையை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி
பெங்களூர்-கொல்கட்டா ஆட்டத்தில் ஊழல்?
இந்திய அணியின் மேற்கிந்தியப் பயணம்
ஐ.பி.எல்: புதிய விதிமுறைகள் அறிவிப்பு
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...