|
| மும்பையை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் |
| வெள்ளிக்கிழமை, 15 மே 2009 ( 12:05 IST ) | |
தென்ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 45வது லீக் போட்டியில், மும்பை இந்தியனஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு 8 மணியளவில் (இந்திய நேரப்படி) துவங்கிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ராப் குயினே 51 ரன்னும், ஸ்மித் 19 ரன்னும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய யூசுப் பத்தான் 17 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 42 ரன்னும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்த ராஜஸ்தான் அணி, கடைசி 5 ஓவர்களில் சொதப்பியது. இதன் காரணமாக 145 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
இதைத் தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்திலேயே தடுமாறியது. துவக்க வீரர் பிராவோ ஒரு ரன், டகாவாலே 18 ரன்கள், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஹானே 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 23 ரன்களுக்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அணித் தலைவர் சச்சின்- ஜெயசூர்யா இணை அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டது. இதில் ஜெயசூர்யா 16 ரன்கள், சச்சின் 40 ரன்கள் எடுத்தனர். இறுதி கட்டத்தில் அபிஷேக் நாயரின் அதிரடி மும்பை அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றது. ஆனால் அவர் 35 ரன்களில் ரன்-அவுட் ஆனதால் வெற்றி இடம் மாறியது.
பரபரப்பான கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் முனாஃப் படேல் வீசிய அந்த ஓவரில் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் இழந்து ஒரு ரன் மட்டுமே மும்பை எடுத்தது. முடிவில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் தரப்பில் வார்னே 3 விக்கெட்டுகள், முனாஃப் படேல், திரிவேதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ஷேன் வார்னேவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் வென்று அரையிறுதி வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்க வைத்துக் கொண்டது. இதுவரை 6 தோல்விகளை சந்தித்ததன் மூலம் மும்பை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|