|
| பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி |
டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற 44-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓரம் வீசிய முதல் பந்தில் 46 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட ராஸ் டெய்லர் ஆட்டமிழந்தார்.ஆனால் கடைசியில் ஒரு பந்து மீதமிருக்கையில் வினய் குமார் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.
5 போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பெங்களூர் அதிர்ச்சியளித்தது.
30/3 என்ற நிலையிலிருந்து ராஸ் டெய்லரும், விரத் கோலியும் 14.2 ஓவர்களில் 86 ரன்களுக்கு உயர்த்தினர்.விரத் கோலி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து பாலாஜியிடம் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பௌச்சர், வான் டெர் மெர்வ், அகில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பெங்களூர் அணி 16 பந்துகள் இருக்கும் போது 107/7 என்று பரப்பான நிலையை எட்டியது.
அப்போது பிரவீண் குமார் பலாஜியின் பந்தை சிக்சருக்கு விரட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.தோனி கோட்டை வீட்ட 4 பை ரன்களும் பெங்களூர் அணிக்கு வலு சேர்த்தது.
சென்னை அணியில் மோர்கெல், ஓரம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தியாகி, பாலாஜி, முரளிதரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அடுத்த போட்டியில் மும்பை இந்தியன் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுவதால் இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணி பென்ங்களூர் அணியை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தைப் பிடிக்கும்.
ராஸ் டெய்லர் தொடர்ந்து இந்த போட்டியிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|