|
| பெங்களூர்-கொல்கட்டா ஆட்டத்தில் ஊழல்? |
| டர்பன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009 ( 15:45 IST ) | |
சவாலான 173 ரனகளை அடித்தும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுற்றது குறித்து ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முன் கூட்டியே நிர்ணயம் செய்யும் விதமான ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இதனால் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி அந்த ஆட்டத்தின் வீடியோவை பார்வையிட முடிவு செய்துள்ளார்.
கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி அன்றைய தினத்தில் அவர்களது அணியின் முன்னணி பேட்ஸ்மெனான பிராட் ஹாட்ஜை அணியில் தேர்வு செய்யாதது குறித்து ஐயம் எழுந்துள்ளது.
மேலும், ஓய்வறையில் இருக்கவேன்டிய பிராட் ஹாட்ஜ் ஆட்டத்தின் போது விருந்தினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமரிந்திருந்தார் இது மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆட்டத்தின் ஒளிப்பதிவை மீண்டும் பார்வையிட்டு பிராட் ஹாட்ஜ் விவகாரம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று மோடி கூறியுள்ளார்.
ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் ஆட்ட நிர்ணய மோசடிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு என்று ஐ.சி.சி. எச்சரித்திருந்தது. ஆனால் அதன் ஊழல் தடுப்புக் குழு ஐ.பி.எல்-ற்கு இந்த சேவைகளை வழங்க அதிக ஊதியம் கேட்டதால் ஐ.பி.எல்.நிர்வாகம் அதனை மறுத்து விட்டது.
ஏற்கனவே எஸ்.எம்.எஸ். கேம் நடத்தி வாங்கிக் கட்டிக் கொண்ட லலித் மோடி தற்போது இந்த புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
அந்த ஆட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்றால் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் எதிர்காலம் சற்று பிரச்சனைதான் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|