|
| ஐ.பி.எல்: புதிய விதிமுறைகள் அறிவிப்பு |
| டர்பன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009 ( 15:40 IST ) | |
ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் மழையால் பாதிப்படையும் ஆட்டங்களுக்காக கூடுதல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இறுதிப் போட்டி மழை காரணமாக முழுதும் கைவிடப்பட்டால் மறு நாளில் அந்த இறுதிப் போட்டி நடைபெறும்.
அதேபோல் மழையால் பாதிக்கப்படும் ஐ.பி.எல். அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு கூடுதலாக இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கப்படுகிறது.
ஐ.பி.எல். குழு பதிலி வீரர்களை களமிறக்குவதிலும் விதிமுறைகளை இறுக்குகிறது. அதாவது வசதிக்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் புத்துணர்ச்சியும் வந்து விளையாடும் வீரர்களுக்கான பதிலி வீரர்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள ஐ.பி.எல். காயம் மற்றும் உண்மையான காரணங்களுக்கு மட்டுமே பதிலி வீரர் களமிறங்கவேண்டும் என்று கூறியுள்ளது.
பேட்ஸ்மென் அடிக்கும் ஷாட் வானில் இருக்கும் கேமராவை தாக்கினால் அது செத்த பந்து என்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஐ.பி.எல். குழு அறிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|