|
| எஸ்.எம்.எஸ். பந்தயத்தை ரத்து செய்தது ஐ.பி.எல். |
| புதுடெல்லி (ஏஜென்சி), 13 மே 2009 ( 13:18 IST ) | |
ஐ.பி.எல் போட்டிகளின் போது ஒவ்வொரு பந்தும் என்ன ஆகும் என்பதை கணித்து, அதனை எஸ்.எம்.எஸ்.செய்து ரொக்கப் பரிசுகளை வெல்லும் பந்தயங்களை ஐ.பி.எல். நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் கிரிக்கெட் வட்டாரங்களின் விமர்சனங்கள் உட்பட, இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் சாடலுடன் பல்வேறு விதமான தாக்குதல்களை சந்தித்து வந்தது.
"இந்த எஸ்.எம்.எஸ். பந்தயங்கள் பற்றி முறையான புகார்கள் எதுவும் இல்லை ; ஆனால் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரின் வார்த்தைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டது" என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.
ஆனால் இது போன்ற பந்தயங்கள் பற்றிய சட்ட சிக்க்ல்களை ஆய்ந்து வருவதாகவும், அதன் பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்றும் ஐ.பி.எல். கூறியுள்ளது.
இந்த பந்தயங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் வெளிப்படையாக சூதாட்டத்தை நுழைப்பதாகவே பார்க்கப்படும் என்று எம்.எஸ்.கில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|