யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபன்: போராடித் தோற்றார் சோம்தேவ்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 11:18 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்தியாவின் சோம்தேவ் தேவ் வர்மன் நழுவவிட்டார். குரோஷியாவின் மரின் சிலிக் சாம்பியன் ஆனார்.

நேற்று மாலை நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், தர வரிசையில் 202-வது இடத்தில் உள்ள சோம்தேவும், 27-வது இடத்தில் உள்ள மரின் சிலிக்கும் மோதினர்.

சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த பரபரப்பான இறுதிப் போட்டியில், 6- 4, 7 - 6 (3) என்ற செட் கணக்கில் மரின் சிலிக் வெற்றி பெற்று பட்டம் வென்றார். கோப்பையை வென்ற சிலிக் ரூ. 37 லட்சம் பரிசாகப் பெற்றார்.

இரண்டாவது இடத்தைப் பிடித்த சோம்தேவிற்கு ரூ. 18 லட்சம் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் அவர் கணிசமான முன்னேற்றத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ராஜிவ் ராம் - எரி புடோராக் ஜோடி பட்டத்தை வென்றது. இறுதியாட்டத்தில் இந்த ஜோடி, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா- ஜீன் கிளாடி ஷெரர் ஜோடியை 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இறுதிப் போட்டியிலும் நுழைந்தார் சோம்தேவ்
தரவரிசையில் யுவராஜ், ஜாகீர் முன்னேற்றம்
அரையிறுதியில் நுழைந்து சோம்தேவ் சாதனை
கத்தார் ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி
சென்னை ஓபன்: காலிறுதியில் பூபதி ஜோடி
மோயாவை வீழ்த்தினார் சோம்தேவ்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...