|
| இறுதிப் போட்டியிலும் நுழைந்தார் சோம்தேவ் |
| சென்னை (ஏஜென்சி), 11 ஜனவரி 2009 ( 13:37 IST ) | |
சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதிக்கு, இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நேற்று தகுதி பெற்று சாதனை புரிந்த நிலையில், அவரை எதிர்த்து ஆடுவதாக இருந்த ரெய்னர் ஷட்லர் போட்டியிலிருந்து விலகியதால், அரை இறுதியில் ஆடாமலேயே சோம்தேவ் இறுதியில் நுழைந்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடந்த பரபரப்பான காலிறுதிப் போட்டியில், தரவரிசையில் 26-வது இடத்திலுள்ள குரேஷிய வீரர் கார்லோவிக்கை, 205-வது இடத்தில் இருக்கும் சோம்தேவ் எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த போட்டியில் 7- 6, 6- 4 என்ற நேர் செட்களில் கார்லோவிக்கை வீழ்த்தி சோம்தேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த சென்னை ஓபன் டென்னிஸில் லியாண்டர் பயஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன் பின்னர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது தான் இந்திய வீரர் ஒருவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை நடைபெறுவதாக இருந்த அரையிறுதி போட்டியில் ரெய்னர் ஷட்லருடன் மோதுவதாக இருந்தார்.ஆனால் காயம் காரணமாக அவர் ஆடவில்லை என்று அறிவித்ததால், அரையிறுதியில் ஆடாமலேயே சோம்தேவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இது ரசிகர்களிடையே மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
23 வயதாகும் சோம்தேவ் தேவ்வர்மன், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது அபாரமான, நுணுக்கமான ஆட்டத்தால் இந்திய டென்னிஸ் உலகிற்கு புதிய நம்பிக்கையை அளித்து, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|