|
| சென்னை ஓபன்: காலிறுதியில் பூபதி ஜோடி |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 13:37 IST ) | |
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டிக்கு பூபதி ஜோடி முன்னேறியது. பயஸ் ஜோடி தோல்வியைத் தழுவியது.
நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தய சுற்றுப் போட்டியில் மகேஷ் பூபதி (இந்தியா)- மார்க் நவ்லஸ் (பகாமஸ்) ஜோடி, இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ்- சோம்தேவ் தேவ்வர்மம் ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் 7- 6 (3), 7- 6(8) என்ற நேர் செட்களில் பூபதி ஜோடி வெற்றி பெற்று காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது.
மற்றொரு போட்டியில் லியாண்டர் பயஸ் (இந்தியா)- லுகாஸ் லோகி (செக் குடியரசு)ஜோடி, ஜெர்மன் நாட்டின் ஜோர்ன் பாவ்- ரெய்னர் ஷுட்லர் ஜோடியை எதிர்த்து களமிறங்கியது.
இதில்,டை பிரேக்கர் முறையில் ஜெர்மன் ஜோடி 4- 6,6- 2,(10- 7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|