|
| மோயாவை வீழ்த்தினார் சோம்தேவ் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 12:17 IST ) | |
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர் கார்லஸ் மோயாவை வீழ்த்தி, இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் காலிறுதிக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தய சுற்று ஆட்டத்தில், வளர்ந்து வரும் இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மனும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்பெயினின் கார்லஸ் மோயாவும் மோதினர்.
இதில், முதல் செட்டை சோம்நாத் இழந்த போதும் நம்பிக்கையுடன் செட்டைத் தொடர்ந்தார். மோயாவின் தவறுகளை தனக்கு சாதகமாக்கி, புள்ளிகளைப் பெற்றார்.
சுமார் 2 மணி 13 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியின் இறுதியில், 4- 6, 7- 5, 6- 4 என்ற செட் கணக்கில் கார்லஸ் மோயாவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சோம்தேவ்.
இதன்மூலம் சென்னை ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முதல்முறையாக சோம்தேவ் தகுதி பெற்றுள்ளார். இதில், 25-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் இவா கார்லோவிச்சை எதிர்கொள்கிறார்.
உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள மோயாவை, 202-வது இடத்தில் உள்ள சோம்தேவ் வீழ்த்தியிருப்பது, அவரது டென்னிஸ் வாழ்க்கையில் முக்கியமானதொரு வெற்றியாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|