|
| ஜன.18-ல் இலங்கை அணி பாக். பயணம் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 15:20 IST ) | |
இலங்கை கிரிக்கெட் அணி வரும் 18 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயரதிகாரி சலீம் அல்தாப் கூறியதாவது:
இரண்டு கட்டங்களாக இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அதன்படி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வரும் 18 ஆம் தேதி இலங்கை அணி பாகிஸ்தானுக்கு வரும்.
கராச்சி (ஜன.21), லாகூர் (ஜன.24) மற்றும் பைசலாபாத் (ஜன.27) ஆகிய நகரங்களில் ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.
இதன் பின்னர் இலங்கை அணி மீண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி பாகிஸ்தானில் இரண்டாம் கட்டப் பயணத்தை மேற்கொள்கிறது. அப்போது இரு அணிகளுக்கு இடையே கராச்சி மற்றும் லாகூரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் முதல் அணி இலங்கை ஆகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|