யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபன்: டேவிடென்கோ விலகல்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 13:31 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் டேவிடென்கோ, காயம் காரணமாக விலகியுள்ளார்.

14-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. அரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய வீரர் நிகோலைய் டேவிடென்கோ, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது இடது காலின் குதிகால் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. வலியால் அவதிப்பட்டு வந்த டேவிடென்கோ, சென்னை ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இது டென்னிஸ் ரசிகர்ளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதற்கிடையே சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெறவேண்டிய போட்டிகள், மழை காரணமாக நேற்று நடக்கவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கேப்டன் பொறுப்பிலிருந்து பீட்டர்சன் விலகல்
சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
சென்னை ஓபன் டென்னிஸில் இன்று...
சென்னை ஓபன்: டேவிடென்கோ வெற்றி
சென்னை ஓபன்: 2-வது சுற்றில் சோம்தேவ்
தென் ஆப்ரிக்காவுக்கு இலக்கு 376 ரன்கள்
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...