|
| கேப்டன் பொறுப்பிலிருந்து பீட்டர்சன் விலகல் |
| லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 15:58 IST ) | |
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கெவின் பீட்டர்சன் விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்சுக்கும், கேப்டன் பீட்டர்சனுக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அணி வீரர்களை களமிறங்குவது, தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்களில் பீட்டர்சன் எடுக்கும் முடிவுகளில் பீட்டர் மூர்ஸ் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பீட்டர் மூர்ஸுடன் கருத்து வேறுபாடு முற்றியதையடுத்து தனது கேப்டன் பதவியை பீட்டர்சன் இன்று ராஜினாமா செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீட்டர்சன்னுக்கு பதில் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|