யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
சிட்னி (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 13:22 IST )
சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எனினும் 2 - 1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி தொடரை வென்றது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே சிட்னியில் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 445 ரன்களும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களும் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 272 ரன்கள் எடுத்தது. வெற்றிபெற 376 ரன்கள் தேவை என்ற இலக்குடன் நேற்று தனது ஆட்டத்தை அது தொடங்கியது. 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 314 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா, 272 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனினும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, 2- 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆட்ட நாயகனாக சிடிலும், தொடர் நாயகனாக ஸ்மித்தும் அறிவிக்கப்பட்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபன் டென்னிஸில் இன்று...
சென்னை ஓபன்: டேவிடென்கோ வெற்றி
சென்னை ஓபன்: 2-வது சுற்றில் சோம்தேவ்
தென் ஆப்ரிக்காவுக்கு இலக்கு 376 ரன்கள்
சென்னை ஓபனில் இன்று..
தகுதி சுற்றில் போபண்ணா வெற்றி
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...