|
| சென்னை ஓபன்: டேவிடென்கோ வெற்றி |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 12:49 IST ) | |
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர் டேவிடென்கோ முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ, ஆஸ்திரியாவைச் சேர்ந்த டேனியல் கோய்லரரை எதிர்த்து களமிறங்கினார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் இறுதியில், டேவிடென்கோ 6- 2,6- 3 என்ற நேர் செட்களில் டேனியலை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற போட்டிகளில் ஜெர்மனின் ஆன்ட்ரஸ் பெக் 6- 1, 6- 0 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ரோகோ கரான்யூசிக்கையும், குரோஷியாவின் இவோ கார்லோவிக் 6- 4, 6- 3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராஜீவ் ராமையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|