யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபன்: 2-வது சுற்றில் சோம்தேவ்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 12:49 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் சோம்தேவ் முன்னேறியுள்ளார்.

முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் வர்மன், அமெரிக்க வீரர் கெவின் கிம்மை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6- 3 என தேவ் வர்மன் கைப்பற்றினார்.அதே வேகத்தில் இரண்டாவது செட்டையும் 6 - 3 என்ற கணக்கில் தன் வசப்படுத்தினார்.

இறுதியில் 6- 3, 6- 3 என்ற நேர் செட்களில் கெவின் கிம்மை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் தேவ்வர்மன்.

மற்றொரு போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா 4- 6, 6- 7 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தென் ஆப்ரிக்காவுக்கு இலக்கு 376 ரன்கள்
சென்னை ஓபனில் இன்று..
தகுதி சுற்றில் போபண்ணா வெற்றி
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்ரிக்கா
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...