யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
தென் ஆப்ரிக்காவுக்கு இலக்கு 376 ரன்கள்
சிட்னி (ஏஜென்சி), 6 ஜனவரி 2009   ( 12:15 IST )
சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 376 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

சிட்னி நகரில் ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

தென் ஆப்ரிக்கா தனது முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் சிட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3 ஆம் நாளான நேற்று, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தபோது, ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, வெற்றிபெற 376 ரன்கள் தேவை என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மோர்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

14 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கென்சி 21 ரன்களுடனும், ஆம்லா 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

பெர்த் டெஸ்டில் 400-க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தபோதும் தென் ஆப்ரிக்கா எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் 376 ரன்களை இலக்காக கேப்டன் பாண்டிங் நிர்ணயித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிட்னி டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபனில் இன்று..
தகுதி சுற்றில் போபண்ணா வெற்றி
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்ரிக்கா
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா- 125/1
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...