|
| தகுதி சுற்றில் போபண்ணா வெற்றி |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 10:53 IST ) | |
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போ பண்ணா வெற்றி பெற்று, முதல் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் ஜெர்மன் வீரர் மைக்கேல் பெரரை எதிர்கொண்டார் ரோகன் போபண்ணா.
இந்த ஆட்டத்தில் 4- 6, 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் பெரரை வீழ்த்தி முதல் சுற்றுக்கு ரோகன் போபண்ணா முன்னேறினார். முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் மோயாவுடன் ரோகன் போபண்ணா மோதுவார் என்று தெரிகிறது.
நேற்று நடந்த மற்ற போட்டிகளில் மாரின் சிலிக் (குரோஷியா), சைமன் (ஜெர்மன்), ஜோர்ன் பாவ், லூகாஸ் லோகி (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|