யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 10:23 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 14-வது சென்னை ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. அரங்கில் நேற்று தொடங்கியது.

நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ், ஜெர்மன் வீரர் ரெய்னர் ஷட்லரை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் முதல் சுற்றை இழந்த அமிர்தராஜ், இரண்டாவது சுற்றை அபாரமாகக் கைப்பற்றினார். எனினும் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் ஷட்லர் வெற்றி பெற்றார்.

இறுதியில் 2- 6, 6- 4, 1- 6 என்ற செட் கணக்கில் ஷட்லரிடம் அமிர்தராஜ் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் செக் குடியரசின் லூகாஸ் லோகி, ஜப்பான் வீரர் கோ சோய்டாவை 3- 6, 6- 2, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்ரிக்கா
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா- 125/1
சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 267/6
ஐ.சி.சி. புகழ்பெற்றோர் பட்டியலில் கவாஸ்கர்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...