யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்ரிக்கா
சிட்னி (ஏஜென்சி), 5 ஜனவரி 2009   ( 13:51 IST )
சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுச்சர் 89 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே சிட்னியில் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

அந்த அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளார்க் 138 ரன்கள் எடுத்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தென் ஆப்ரிக்கா தொடங்கியது. எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த அணி 327 ரன்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக பவுச்சர் 89 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் சிட்டில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜான்சனுக்கு 2 விக்கெட்டும், டொனால்டுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

பின்னர் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தற்போது 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா- 125/1
சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 267/6
ஐ.சி.சி. புகழ்பெற்றோர் பட்டியலில் கவாஸ்கர்
'ஹெரால்ட் சன்' உலக அணியில் சச்சின், காம்பீர்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...