யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 10:14 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. இன்றைய ஆட்டத்தில் பிரகாஷ் அமிர்தராஜ், போபண்ணா களமிறங்குகின்றனர்.

முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 14-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. அரங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டியில் நிக்கோலே டெவிடென்கோ (ரஷ்யா), ஸ்டானிஸ்லஸ் வாவ்ரின்கா (ஸ்விட்சர்லாந்து), மரின் சிலிக் (குரோஷியா), இவோ கார்லோவிக், ரெய்னர் ஷெட்லர் (ஜெர்மன்), கார்லோஸ் மோயா (ஸ்பெயின் )உள்ளிட்ட பல முன்னணி டென்னிஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இன்றைய ஆட்டம்:

இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜெர்மனியின் மிச்சேல் பெர்ரரை, இந்தியாவின் போபண்ணா எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில், ஜெர்மனியின் ரெய்னர் ஷெல்டரை பிரகாஷ் அமிர்தராஜ் எதிர்த்து விளையாடுகிறார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்ஜ் மன்கட்- பாம்பிரி ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம்- எரிக் புடோராக் ஜோடியைச் சந்திக்கிறது.

இதேபோல் போபண்ணா- சிபோலா (இத்தாலி) ஜோடி, அமெரிக்காவின் டேவிட் மார்டின் - ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிட்னி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா- 125/1
சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 267/6
ஐ.சி.சி. புகழ்பெற்றோர் பட்டியலில் கவாஸ்கர்
'ஹெரால்ட் சன்' உலக அணியில் சச்சின், காம்பீர்
ஆஸி.க்கு தோல்வி ஏன்? வார்ன் விளக்கம்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...