யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சிட்னி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா- 125/1
சிட்னி (ஏஜென்சி), 4 ஜனவரி 2009   ( 15:21 IST )
சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.

ஆறு விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் இன்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது ஆஸ்திரேலியா. மைக்கேல் கிளார்க் அபாரமாக விளையாடி சதமடித்தார். மிட்செல் ஜான்சன் 64 ரன்களும், ஹவ்ரிட்ஸ் 41 ரன்களும் எடுத்தனர்.

கிளார்க் 138 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் 136-வது ஓவரில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் சேர்த்தது.

தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களில் ஸ்டெய்ன், ஹாரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், நிடினி, மோர்கெல், காலிஸ், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய தென்ஆப்ரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் மெக்கன்ஸி 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரர் கிரேம் ஸ்மித் 30 ரன்கள் எடுத்த நிலையில் காயத்தால் வெளியேறினார். ஹஸ்ஹிம் ஆம்லா 30 ரன்கள், ஜாக் காலிஸ் 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 267/6
ஐ.சி.சி. புகழ்பெற்றோர் பட்டியலில் கவாஸ்கர்
'ஹெரால்ட் சன்' உலக அணியில் சச்சின், காம்பீர்
ஆஸி.க்கு தோல்வி ஏன்? வார்ன் விளக்கம்
வெளிநாடுகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும்: கங்குலி
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...