|
| சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம் |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009 ( 15:13 IST ) | |
ஏ.டி.பி அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது.
14-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நாளை (5ம் தேதி) தொடங்கி வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டியில் நிக்கோலே டெவிடென்கோ (ரஷ்யா), ஸ்டானிஸ்லஸ் வாவ்ரின்கா (ஸ்விட்சர்லாந்து), மரின் சிலிக் (குரோஷியா), இவோ கார்லோவிக், ரெய்னர் சட்லர் (ஜெர்மன்), கார்லோஸ் மோயா (ஸ்பெயின் )உள்ளிட்ட பல முன்னணி டென்னிஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா சார்பில் பிரகாஷ் அமிர்தராஜ், சம்தேவ் தேவ் வர்மன் ஆகியோர் 'வைல்டு-கார்டு' முறையில் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் இரட்டையர் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறுதிப் போட்டிகள், வரும் 11 ஆம் தேதி நடக்கவுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் இரண்டு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படவுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|