|
| ஐ.சி.சி. புகழ்பெற்றோர் பட்டியலில் கவாஸ்கர் |
| சிட்னி (ஏஜென்சி), 3 ஜனவரி 2009 ( 12:33 IST ) | |
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்ட 'கிரிக்கெட்டில் புகழ் பெற்றோர் பட்டியலில்' இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'ஹால் ஆஃப் ஃபேம்' என்ற புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், பிஷன் சிங் பேடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் இடம் பெற்றுள்ள புகழ் பெற்ற வீரர்கள் வரிசையை ஐ.சி.சி. தலைமை அதிகாரி ஹருன் லோர்கட் சிட்னியில் அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கிரிக்கெட்டில் சாதனை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த புகழ்பெற்றோர் வரிசை அறிமுகம் செய்யப்படுகிறது" என்றார்.
இந்த, 'ஹால் ஆஃப் ஃபேம்' முதல் பட்டியலில், டான் பிராட் மேன், சோபர்ஸ் ஆகியோரின் வரிசையில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்" என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|