யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஆஸி.க்கு தோல்வி ஏன்? வார்ன் விளக்கம்
மெல்போர்ன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 12:17 IST )
ஆஸ்திரேலிய அணி புதுவிதமாக சிந்திக்கத் தவறியதால் தான் தோல்விகளை சந்தித்து வருவதாக, அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:

கடந்த 2005ஆம் ஆண்டில் இங்கிலாந்து வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்தது. அந்த அணியிடம் ஆஸ்திரேலியாவும் தோல்வியைத் தழுவியது.

அதைப் போலவே தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தோல்வியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா, தென் ஆப்ரிக்காவிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

அந்த இரு அணிகளுமே புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா இதுபோன்ற புதுவிதமாக எதையும் சிந்திக்கத் தவறியதால் தான் தற்போது தோல்விகளை சந்தித்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் உத்திகளை பின்பற்றி மற்ற அணிகள் தங்களை மேம்படுத்தி வருகின்றன. எனவே ஆஸ்திரேலியா தனது உத்திகளை மாற்றிக் கொள்வது குறித்து உடனே சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு ஷேன் வார்ன் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வெளிநாடுகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும்: கங்குலி
காயம் : பிரெட்லீ, சைமன்ஸ்க்கு அறுவை சிகிச்சை
தோனி குடும்பத்திற்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
மீண்டும் எழுச்சி பெறுவோம்: பாண்டிங்
தேசிய கேரம்: இளவழகி பட்டம்
சிட்னி டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...