|
| சிட்னி டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு |
| மெல்போர்ன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 30 டிசம்பர் 2008 ( 15:18 IST ) | |
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹைடனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்திருப்பதன் மூலம் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் மூத்த வீரர்கள் மேத்யூ ஹைடன், சைமண்ட்ஸ் உள்ளிட்டோரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று, பெரும்பாலான ஆஸ்திரேலியப் பத்திரிகைகள் கருத்து வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், வரும் ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ள 3-வது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு மேத்யூ ஹைடன் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரட்லீ, சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம் வருமாறு: ரிக்கி பாண்டிங் (கேப்டன்), ஹைடன், காடிச், ஹசி, மைகேல் கிளார்க், ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பிராட் ஹாடின், ஜான்சன், நாதன் ஹாரிட்ஸ், பென் ஹில்பெந்காஸ், பீட்டர் சிடில் மற்றும் போலிங்கர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|